புதிய ஒற்றுமையை முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கிறது!

Date:

தமிழ் கட்சிகளிற்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்வதென தமிழ்  தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் மூன்றும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன.

இன்று (3) காலை யாழ்ப்பாணத்தில் கூடிய மூன்று கட்சிகளின் தலைவர்களும் இந்த முடிவை எடுத்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், இன்று காலை 11.30 மணியளவில் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.

சுமார் ஒரு மணித்தியாலயம் இந்த சந்திப்பு நடந்தது.

6 தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் விடுத்த அறிவிப்பு தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே 9 கட்சிகளின் கூட்டு பேச்சு பாதி வழியில் நிற்கும் போது, ரெலோ திடீரென விடுத்த இந்த முயற்சி ஏற்படுத்திய சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டது.

ஏற்கனவே 9 கட்சிகள் கூட்டு பேச்சு நடந்திருப்பதால், அந்த கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய ஒற்றுமை முயற்சியை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நாளை (4) சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில் க.வி.விக்னேஸ்வரன் தரப்பு ஒரு பிரதிநிதியை அனுப்புவதாக கூறியுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாது. தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதி வருவதால், நாளைய சந்திப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், கூட்டமைப்பாக புதிய  கூட்டு முயற்சியை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்