நாய்க்கு குரல் கொடுத்த நடிகர் சூரி.. வெளியானது ‘அன்புள்ள கில்லி’ டீசர் (vedio)

Date:

மனிதன், நாய் இடையேயான நட்புறவை வைத்து வித்தியாசமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்புள்ள கில்லி’. இப்படத்தை மாறுப்பட்ட கதைக்களத்துடன் இயக்கியுள்ளார் ஸ்ரீநாத் ராமலிங்கம். நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போன்று இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இந்தப் படத்தில் ஒரு நாயிக்கு குரல் கொடுத்துள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக ‘அன்புள்ள கில்லி’ உருவாகியுள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது. மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை ஶ்ரீதர் சாகர் மற்றும் மாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்