30.4 C
Jaffna
April 24, 2025
Pagetamil
இந்தியா

குட்டி யானைகளை தாக்கும் ஹெர்ப்ஸ் வைரஸ்..

கேரள மாநிலத்தின் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை காட்டுப்பகுதியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்த யானை முகாமில் இருந்த ஸ்ரீகுட்டி என்ற 3 வயது குட்டியானைக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்கு கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அந்த யானை பரிதாபமாக மரணம் அடைந்தது.

இதுதொடர்பாக கேரள வனத்துறை சார்பில் கால்நடை மருத்து அதிகாரி ஈஸ்வரன் தலைமையில் டாக்டர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.கால்நடை மருத்துவ குழுவினரின் விசாரணையில், காட்டாக்கடை முகாமில் இருந்த ஸ்ரீகுட்டி யானை ஹெர்ப்ஸ் என்ற வைரஸ் தாக்கி பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து கால்நடை மருத்துவ அதிகாரி ஈஸ்வரன் கூறியதாவது:-

யானைகளை தாக்கும் ஹெர்ப்ஸ் என்ற வைரசால் பாதிக்கப்பட்டு ஸ்ரீகுட்டி யானை பலியாகியுள்ளது. இந்த வைரஸ் யானைகளை மட்டுமே தாக்கக்கூடியது ஆகும்.

இதனால் காட்டாக்கடை முகாமில் உள்ள அனைத்து யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வேறு யானைகளுக்கு பாதிப்பு இல்லை. தற்போது இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதனால் தற்போது கேரளாவின் காட்டுப்பகுதியில் இருந்து யானை முகாம்களுக்கு கொண்டுவரப்படும் யானைகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பின்னரே மற்ற யானைகளுடன் முகாமில் விட வேண்டும். பரிசோதனை செய்யும் வரை முகாமில் தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று யானை முகாம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

இந்தியாவை உலுக்கிய தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகின!

Pagetamil

‘போய் மோடியிடம் சொல்லு…’: ஜம்மு காஷ்மீரில் 28 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற ஆயுததாரிகள்!

Pagetamil

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கத்தியால் குத்தி கொலை: மனைவி கைது

Pagetamil

மதிமுக: “நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்” – மல்லை சத்யா சொல்வது என்ன?

Pagetamil

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

Pagetamil

Leave a Comment