மெண்டிஸ் நிறுவனத்திற்கு, மதுபானத்தை மீண்டும் தயாரிக்க அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பல பில்லியன் டொலர் வரி ஏய்ப்பு காரணமாக மதுபானம் தயாரிப்பதற்கான நிறுவனத்தின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவர்கள் மீண்டும் மதுபானம் தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நிலுவை வரி செலுத்துதலுக்கு தீர்வு காண அவர்களுக்கு கட்டண அட்டவணையை நிறுவனம் கோரியுள்ளதாகவும், கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறுவனத்தை இயக்க நிதி அமைச்சும், மதுவரி திணைக்களமும் அனுமதி வழங்கியதாக மதுவரி திணைக்கள பேச்சாளர் கபில குமாரசிங்க கூறினார்.
இருப்பினும், ஒப்புக்கொண்ட நிபந்தனைகளின் கீழ் நிறுவனம் தொடரத் தவறினால், உரிமம் மீண்டும் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.
வரி செலுத்துவதைத் தவிர்த்ததை தொடர்ந்து, மதுசார உற்பத்திக்கு 2018 ஜனவரியில் இருந்து மென்டிஸ் நிறுவனத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.
1960 களில் நிறுவப்பட்ட டபிள்யூ. எம். மெண்டிஸ் & கோ. நாட்டின் பழமையான உள்ளூர் மதுபான பிராண்டுகளில் ஒன்றாகும்
பிணை முறி மோசடி வழக்கில் சிக்கியுள்ள அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமானது மெண்டிஸ் நிறுவனமென்பது குறிப்பிடத்தக்கது.