காதலனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி: முறையிட போன இடத்தில் முத்தமிட்ட பொலிஸ்காரர்!

Date:

காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்ட சம்பவத்தை முறையிடுவதற்காக நெலுவ பொலிஸ் நிலையம் சென்ற சிறுமி ஒருவரை, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முத்தமிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெலுவ மேல் கிகும்மடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் தனது தாயுடன் நேற்று முன்தினம் (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்காக நெலுவ பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

சிறுமி இளைஞன் ஒருவனை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் அவரை சந்திக்க சென்றுள்ளார்.

சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இளைஞன், சிறுமியின் அந்தரங்க காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

குறித்த காணொளி மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி அச்சுறுத்தி சிறுமியை பல முறை அழைத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அறிந்து கொண்ட பின்னர் இளைஞனை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ள நிலையில் இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக நேற்று பொலிஸ் நிலையம் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசாரணைகளுக்காக தன்னையும் தனது மகளையும் இரவு வரையில் பொலிஸ் நிலையத்தில் தங்கி இருக்குமாறு பொலிசார் தெரிவித்திருந்த நிலையில் அவர்கள் அங்கு தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (30) பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாம் தங்கியிருந்த அறைக்கு வந்து தனது மகளை முத்தமிட்டதாக தாய் தெரிவித்துள்ளார்.

 

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்