சர்வதேச நிகழ்ச்சி மூலம் டிவி தொகுப்பாளராகிறாரா ஆக்ஷன் கிங்!

Date:

பிக் பாஸுக்கு போட்டியாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஸீ தொலைக்காட்சி தயாராகிறது.

வெளிநாடுகளில் சர்வைவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலம். ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, 100 நாட்களுக்குப் பிறகு தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்க ஸீ நெட்வொர்க் அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையின் பிரபல தயாரிப்பு நிறுவனத்தினருடன் இணைந்து ஸீ இந்நிகழ்ச்சியை தயாரிக்கிறது.

தென்னாப்பிரிக்கா அருகே இதற்கென ஒரு தனித்தீவை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியையும் முக்கியமான அனைத்து மொழிகளிலும் உருவாக்குகின்றனர்.

பிரபலமான சர்வதேச நிகழ்ச்சியான ‘சர்வைவர்’ தமிழ் பதிப்பை தொகுத்து வழங்க சிலம்பரசன் டி.ஆர் (STR), தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் குழு பரிசீலித்து வந்ததாக செய்திகளும் கசிந்தன.

இருப்பினும், நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் ஆக்சன் கிங் அர்ஜுனை ஹோஸ்டாக நடிக்க அணுகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்