பொகவந்தலாவ, அம்பகமுவ பொது சுகாதார வைத்திய பிரிவுகளில் 57 கொரோனா தொற்றாளர்கள்

Date:

பொகவந்தலாவ பொதுசுகாதார வைத்திய பிரிவு மற்றும் அம்பகமுவ பொதுசுகாதார வைத்திய பிரிவுகளுக்குட்பட்ட பகுதியில் 57 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ சுகாதாரப் பிரிவில் நேற்று (29) வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் படி 42 பேரும் அம்பகமுவ பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட அட்டன் சமனலகம, அட்டன் சுற்றுப்புற வீதி, புறுட் ஹில், கந்தையா கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் 15 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அட்டன் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அட்டன் பகுதியில் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 16 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அட்டன் பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ்....

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்