கோதுமை மாவின் விலை அதிகரித்ததால், அடுத்த வாரத்திலிருந்து பாணின் விலை அதிகரிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
செரண்டிப் நிறுவனம் கடந்த வாரம் முதல் ஒரு கிலோ மாவின் விலையை 18 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இதனால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை 5-10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1