கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொண்டித்தோப்பு சுந்தரமுதலி தெருவில் கடந்த 27ஆம் திகதி கொரோனா குறித்து 12ஆம் வகுப்பு மாணவி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வீடு வீடாக சென்று கொரோனா குறித்தும், தடுப்பூசி செலுத்துவது பற்றி அரசு காட்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது அந்த தெருவை சேர்ந்த வாலாரம் என்ற முதியவரின் வீட்டுக்கு வந்த மாணவி தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விளக்கினார். அப்போது வலுக்கட்டாயமாக மாணவியை வீட்டிற்குள் இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து உடனே காவல்நிலையத்தில் மாணவி புகார் அளித்ததால் வாலாராமை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைமு செய்தனர். விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.