குடிக்க பணம் தராததல் மனைவியின் காதை அறுத்து கம்மலை எடுத்து சென்ற கணவன்!

Date:

மதுபானம் குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவியின் காதை அறுத்து, கம்மலை கணவர் எடுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, குடிபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமது மனைவி தங்கமணியை தினமும் மிரட்டி பணம் வாங்கி குடித்து வந்துள்ளார்.

அதன்படி நேற்று காலை மதுகுடிக்க பணம் வேண்டும் என மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவருடைய மனைவி மறுக்க, ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணி,அவரது காதை அறுத்து கம்மலை எடுத்து சென்றுள்ளார்.

வலியால் துடித்த தங்கமணி, காது அறுபட்ட நிலையில் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார்.

அதனை கண்ட போலீசார், முதலில் மருத்துமனைக்கு செல்லுங்கள் என்றும், தாங்கள் மருத்துவமனைக்கு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தங்கமணி சிகிச்சை பெற்று வருகிறார்.

கொடூர குடிகாரன் பாலசுப்ரமணி பொலிசார் தேடி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்