செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் கிடைத்த புதிய காட்சிகளை, சீனா தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சீனா வெற்றிகரமாக அதன் சுரொங் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் கடந்த மாதம் 15ம் திகதி தரையிறக்கியது. ஆறு சக்கரங்களைக் கொண்ட சுரொங் ரோவர், செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் பெரிய நிலப்பரப்பான “உடோபியா பிளானிஷியா” என்கிற இடத்தை இலக்கு வைத்து ஆய்வு நடத்தியது.
42 நாட்களில் சுமார் 236 மீட்டர் தூரம் சுரொங் ரோவர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் மற்றும் தண்ணீருக்கான ஆதாரங்களை தேடி ஆய்வு நடைபெற்று வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது. மொத்தம் 90 நாட்களுக்கு இந்த ஆய்வுப் பணிகள் நடைபெறுவதாக சீனா தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய லேண்டர் வெற்றிகரமாக செவ்வாயில் கடந்த மாதம் தரை இறங்கியது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்யவும் செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இது விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
…and Zhurong on the turn… pic.twitter.com/yub4UfcwG6
— Andrew Jones (@AJ_FI) June 27, 2021
இந்த விண்கலமானது கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.சீன விண்கலம் செவ்வாய் கிரத்தின் புவியியல் அமைப்பு ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும். அதேபோல் இந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்டுள்ள கேமராக்கள் செவ்வாய் கிரகத்தை படம் எடுத்து அனுப்பும். இதன்மூலம் செவ்வாய் கிரகம் குறித்த புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என முன்னதாக சீனா கூறியது குறிப்பிடத்தக்கது.
Here's the deployment of Zhurong from the landing platform, but this time with SOUND pic.twitter.com/gKES48hT6a
— Andrew Jones (@AJ_FI) June 27, 2021