காதலன் பிரேக் அப் செய்ததால் விலை மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை காதலி தீ வைத்து கொளுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காதலர்களின் பிரேக் அப் எப்போதுமே துயரமானது தான். அந்த வகையில் தாய்லாந்தை சேர்ந்த 36 வயது பெண் தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் பிரேக் அப் செய்ததால் ஆத்திரமடைந்து தான் பரிசாக அளித்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினார்.அவரது செயல் பார்க்கிங் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவரது செயல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் யாரும் காயமடையவில்லை என்றாலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற ஆறு வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கை தீ ஒரு பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1