இந்திய மாநிலம் கர்நாடகாவில் தங்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உத்தர கன்னடா மாவட்டத்தில் கர்வார் கடற்கரை பகுதியில் சனிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் கார்வார் மாவட்டத்தின் ஹொன்னவர் துறைமுக நகரமான காசர்கோடா கிராமத்தில், சுமார் 400 மீனவ குடும்பங்கள் வாழ்கின்றன.
முன் அறிவிப்பு இல்லாமல், ஆந்திராவைச் சேர்ந்த ஹொன்னவர் போர்ட் பிரைவேட் கம்பெனி லிமிடெட் தங்கள் ஜே.சி.பி.யை கொண்டு வந்து, ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழும் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர்.
மீனவர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சித்தால் பேரழிவு நேரிடும் என எச்சரித்துள்ளனர். அதன்பிறகும் அந்நிறுவனம் வீடுகளை இடித்து வேலைகளைத் தொடங்கியது.
இந்த நிலையில், தனியார் துறைமுக கட்டுமானத்தை எதிர்த்து, மீனவர்கள் கடலில் குதித்து வெகுஜன தற்கொலையில் ஈடுபட முடிவெடுத்தனர். அதற்காக டோங்கா கடற்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூடினர். அதன்பின்னர், காவல்துறைக்கு எச்சரிக்கப்பட்டு, அவர்களை தடுக்க 300-க்கும் மேற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் துறைமுக கட்டுமானத்திற்காக 93 ஏக்கர் நிலத்தை 600 கோடி ரூபாய் செலவில் மாநில அரசிடமிருந்து கையகப்படுத்தியது. மண்ணை அகற்றி ஒரு தனியார் துறைமுகத்தைத் தொடங்க ஜட்டியுடன் காசரகோடு மீன்பிடித் துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம் இருந்தது.
மார்ச் மாதம் நடைபெற்ற மரைடைம் இந்தியா மெய்நிகர் உச்சிமாநாட்டின் (Maritime India Virtual Summit 2021) ஒரு பகுதியாக, தனியார் துறைமுகம் காட்டுமிவ் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு வசிக்கும் மீனவர்கள் மொத்தம் 235 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அங்கிருக்கும் மீனவர்களை வெளியேற்றும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது.