இலங்கையை இரக்கமில்லாமல் அடித்து துவைத்த இங்கிலாந்து!

Date:

இலங்கைக்கு எதிரான 3வது ரி 20 போட்டியிலும் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, 3-0 என வெள்ளையடிப்பு செய்தது.

வடிவேலு பாணியில் சொல்வதென்றால், எப்பொழுதுமே இலங்கை அணியின் துடுப்பாட்டம் பயங்கர மோசமாக இருக்கும். நேற்று, மோசமாக, பயங்கரமாக இருந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றது. டேவிட் மாலன் (48 பந்துகள்) பரிட்சோ 51 (43 பந்துகள்) பெற்றனர்.

இங்கிலாந்து அணி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 101 ஓட்டங்களை பெற்றது.

எனினும், துஷ்மந்த சமீர 17 ஓட்டங்களிற்கு 4 விக்கெட் கைப்பற்றியது, இங்கிலாந்தின் மத்திய வரிசையில் உடைவை ஏற்படுத்தியது. 200 ஓட்டங்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இலங்கை 180 ஓட்டகளில் கட்டுப்படுத்தியது.

இலக்கை விரட்டிய இலங்கை 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சம், பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ பெற்ற 20 ஓட்டங்கள். ஊசத பெர்னாண்டோ 19, டிக்வெல்ல 11 ஓட்டங்கள். ஏனைய அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றனர். இறுதியில் 18.3 ஓவர்களில் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

இலங்கையில் ஸ்கோரில், 3வது அதிகூடிய எண்ணிக்கை இங்கிலாந்து வழங்கிய உதிரிகள். அந்த வகையில் 16 ஓட்டங்கள் கிடைத்தது.

டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் டேவிட் மாலன். தொடர் நாயகன சாம் கரன்.

ரி20 போட்டிகளில் இலங்கையின் 4வது மோசமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

82 vs இந்தியா, 2016
87 vs அவுஸ்திரேலியா, 2010
87 vs இந்தியா, 2017
91 vs இங்கிலாந்து, 2021
92 vs நியூசிலாந்து, 2010

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்