தேயிலைத் தோட்டங்களுக்கு இரசாயன உரங்களை வழங்குமாறு அரசாங்கத்தை கோரி, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் இன்று கண்டி, கண்ணொருவவில் போராட்டம் நடத்தினர்.
கண்டி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தம்பகொட செனவிரத்ன ஊடகங்களுடன் பேசுகையில், நாடு முழுவதும் சுமார் 500,000 தோட்டக்காரர்கள் மற்றும் தொடர்புடைய 2.5 மில்லியன் பேர் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடல் பயனற்றது என்பதால் இந்த விஷயத்தை ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இரசாயன உரத்தை ஒரு தீங்கு விளைவிக்கும் அங்கமாகக் கருதினால், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், விஞ்ஞானிகள் மற்றும் துறையில் நிபுணர்களின் உதவியுடன் ஒரு மாற்றீட்டை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
தேயிலைத் தோட்டங்களின் வருமானம் ஒரு மாத காலத்தில் 225 புதிய வாகனங்களை வாங்குவதற்கு போதுமான நிதியைக் கொண்டு வரக்கூடும் என்று அவர் கூறினார்.
இரசாயன உரத்தின் பிரச்சினைக்கு மாற்று தீர்வை அறிமுகப்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்,