நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கிற அயலான் படத்தின் சுவாரஸ்சிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மட்டும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் செய்ய திட்டமிட்ட இத்திரைப்படம் கொரானா இரண்டாவது அலை காரணமாக இன்று வரை ரிலீசாகவில்லை. இதையடுத்து சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமையில் உருவாகும் இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதோடு இந்த படம் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகுவதால் கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் பலகோடி ரூபாய் செலவு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மினரல் வாட்டர் சப்ளை செய்யும் ஏஜென்ட்டாக நடித்துள்ளார். அதோடு பாக்கெட் சைஸில் படம் முழுவதும் பயணிக்கும் வகையில் ஏலியன் ஒன்றும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஏலியனுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் நகைச்சுவை கலந்த கதை தான் அயலான் படம் என கூறப்படுகிறது. திட்டமிட்டப்படி பணிகள் முடிவுற்றால் இந்தாண்டு இறுதிக்குள் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.