இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியுடன் கோவேக்சின் தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் உலக சுகாதார அமைப்பு இன்றும் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு மற்றம் மருந்து கட்டுபாட்டு அமைப்பு அவசர பயன்பாட்டிற்கு கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள ஒப்பதல் வழங்கியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுபாட்டு அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் தேவையான அனைத்து தரவுகளையும் வழங்கிய பின்னர், கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.