கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்களுக்கு
நேற்றைய (25) தினம் மலேரியா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை மலேரியா அற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருப்பினும் இரணைத்தீவு
இலங்கை இந்தியாவுக்கு இடைப்பட்ட கடலில் தனித்தீவாக இருப்பதனால்
இந்தியாவில் தற்போதும் இருக்கின்ற மலோியா சில வேளைகளில்
கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இப் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு அங்கு குடியேறி வசித்து வருகின்ற
மக்களுக்கு நுளம்பு வலைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மலோியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், மாட்ட
உளசல மருத்துவ அதிகாரியுமான மா. ஜெயராஜா தலைமையிலான மருத்துவக் குழுவினர்
இரணைத்தீவுக்குச் சென்று அங்கு வசிக்கின்றவர்கின் இரத்த மாதிரிகளை
பரிசோதனைக்காக பெற்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1