‘ராட்சசன்’ ஹிந்தி ரீமேக் உறுதி… ஹீரோ யார் தெரியுமா!

Date:

‘ராட்சசன்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது ராட்சசன்.

இந்தியாவின் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 50 படங்களின் பட்டியலில் ராட்சசன் 21-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த சைக்கோ திரில்லர் படங்களில் ராட்சசனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.

ராட்சசன் திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆனது. தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பெல்லம்கொண்டா சீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அதையடுத்து ராட்சசன் ஹிந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அக்ஷய் குமார், ராட்சசன் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமைகளை அக்ஷய் குமார் வாங்கியிருப்பதாகவும் தன்னுடைய சொந்த பேனர் தயாரிப்பின் கீழ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரமேஷ் வர்மா என்ற இயக்குனர் ராட்சசன் ஹிந்தி ரீமேக்கை இயக்கவிருக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்