காருடன் கடத்திச் செல்லப்பட்ட யுவதி: நூதன திருட்டு!

Date:

கராபிட்டியில் உள்ள ஒரு வங்கி அருகே காருடன் யுவதியொருவர் கடத்தப்பட்டது குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது சகோதரியுடன் வங்கிக்கு சென்ற யுவதி, சகோதரன் இறங்கி சென்ற பின்னர், காருக்குள் காத்திருந்துள்ளார். இதன்போது, திடீரென காருக்குள் ஏறி உட்கார்ந்திருந்த ஒருவர், காருடன் யுவதியை கடத்தி சென்றுள்ளார்.

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் தற்போது மருத்துவம் பயின்று வரும், அக்மீமனவைச் சேர்ந்த 25 வயது யுவதியே கடத்தப்பட்டார்.

யுவதி காருக்குள் காத்திருந்த போது, திடீரென ஏறி உட்கார்ந்த இளைஞன், காரை சற்று பின்னால் நகர்த்தவா என கேட்டு விட்டு, முன்னும் பின்னும் ஓட்டியுள்ளார். பின்னர், காரை கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்.

பின்னர் யுவதியின் தலைமுடியை பிடித்திழுத்து, ஒரு கையால் யுவதியின் கழுத்தை வளைத்து பிடித்தபடி, ஒரு கையால் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

தனக்கு யுவதியின் காரி தேவையில்லையென கூறி, 62,000 ரூபா பணம் மற்றும் தங்கநகைகளை பறித்தெடுத்துள்ளார். காரில் தனது கைரேகைகள் படித்திருக்கும், அவற்றை அழித்து விட்டு எங்காவது விட்டுவிடுவேன் என கூறி, யுவதியை இறக்கி விட்டு சென்றுள்ளார்.

நேற்று பூசா மரக்கூட்டுதாபனத்திற்கு முன்பாக கார் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்