உணவை வேகமாக சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்!

Date:

காலையில் எழுந்தவுடன் எத்தனை மணிநேரத்தில் சாப்பிட வேண்டும் என்றும் உணவை வேகமாக சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்றும் அறிந்து கொள்ளலாம். காலை உணவு மிக முக்கியம் என்கிறது, மருத்துவம்.

காலை உணவினால் விட்டமின், மினரல்ஸ், கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். டிபன், சாப்பாடு, பழங்களை சாப்பிடலாம். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட வேண்டும்.

காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகள் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

அரக்கப்பறக்க அரைகுறையாக சில நிமிடங்களில் சாப்பிடுபவர்கள்தான் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினம் ஒரு பழம், காய்கறி, கீரை ஆகியவை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிசார் வாகனங்களை நிறுத்தி சாரதிகளை மருத்துவ பரிசோதிக்கும் விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை முன்னெடுப்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவித்து வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை...

பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பம்

இலங்கை இன்று (நவம்பர் 11) கொழும்பு துறைமுக நகரத்தில் (Colombo Port...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்