26.9 C
Jaffna
February 28, 2025
Pagetamil
இலங்கை

உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்!

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்களை ஒன்லைன் முறையின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையில் இவ்வாறு விண்ணப்பிக்க முடியும்.

உத்தியோகபூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் செயலி மூலமாகவோ ஜூலை 10 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

ஒரு பாடத்திற்கான விண்ணப்பத்திற்கு ரூ. 250 க்ட்டணத்தை, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது ஒரு தபால் நிலையத்திலோ பணம் செலுத்தலாம்.

சம்பந்தப்பட்ட கட்டணம் செலுத்திய பின்னர், விண்ணப்பதாரர் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று திணைக்களம் கூறியது.

விண்ணப்பதாரர் பதிவின் போது அவர் வழங்கிய மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் பெறுவார்.

விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க கையொப்பம் அல்லது ஒப்புதல் பெற தேவையில்லை. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் சீரற்ற வானிலை

east tamil

விசாரணை அறிக்கைகள் மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

கிராமிய திட்டங்களுக்கு 1400 பில்லியன் மூலதன ஒதுக்கீடு – ஜனாதிபதி

east tamil

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் – ஜோன் ஜிப்ரிகோ

east tamil

பிறைக்குழு மாநாடு இன்று!

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!