24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

மக்காத மதிய உணவுத்தாள்கள் மீதான தடை இறுக்கப்படுகிறது!

மக்காத மதிய உணவுத் தாள்களை (lunch sheets) பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அனைத்து வகையான மக்காத மதிய உணவுத் தாள்களையும் பயன்படுத்த தடை விதிக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில், அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் மதிய உணவுத் தாள்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்தது. உள்ளூர் தயாரிப்பாளர்கள் ஒழுங்குமுறைக்கு இணங்கவும், மக்கும் பொருளை மட்டுமே தயாரிக்கவும் ஒப்புக்கொண்டனர்.

இருப்பினும், இந்த நடவடிக்கை வெற்றிகரமாக இல்லாததால், மதிய உணவுத் தாள்களை முழுமையாகப் பயன்படுத்த தடை விதிக்க அமைச்சர் அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

உலகில் மதிய உணவுத் தாள்களைப் பயன்படுத்தும் ஒரே நாடு இலங்கை மட்டுமே என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 106 தொன் மதிய உணவுத் தாள்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுவதாகவும், தினசரி கிட்டத்தட்ட 10 மில்லியன் மதிய உணவுத் தாள்கள் சுற்றுச்சூழலில் எறியப்படுவதாகவும் அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

இயற்கை சூழலில் இந்த மதிய உணவுத்தாள்கள் அழிய கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆகும்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன,
நாட்டில் மதிய உணவுத் தாள்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய உத்தரவுகளை அமல்படுத்தலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

1ம் தர மாணவர் சேர்க்கை – இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

east tamil

மகிந்த 4.6 மில்லியன் வாடகை செலுத்த வேண்டும் – அனுர

east tamil

செல்வம் அடைக்கலநாதனுக்கு பிடியாணை: பின்னணி என்ன?

Pagetamil

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

Pagetamil

மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 57 வயதுடையவர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment