தாங்கள் காதலிக்கும் நபர்கள் செய்யும் செயல்களும், தங்கள் மீது காட்டும் அன்பும், காதலும் இந்த உலகுக்கு அப்பாற்பட்டது என சிலர் கூறுவதை நாம் கண்டுள்ளோம். ஆனால், தான் காதலிக்கும் நபரே இந்த உலகுக்கு அப்பாற்பட்டவர் என ஒருவர் கூறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒருவர் உண்மையிலேயே கூறியுள்ளார்.
ஆம்!! இது கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் இதுதான் உண்மை. ஆண்டிரோமேடா காலக்சியை சேர்ந்த ஒரு வேற்றுகிரகவாசியை (Alien) தான் காதலிப்பதாக ஒரு இங்கிலாந்து பெண்மணி கூறியுள்ளார்.
அப்பி பெல்லா என்ற இந்த பெண்மணி, தான் அடையாளம் தெரியாத பறக்கும் வாகனத்தில் (UFO) ஒரு வேற்றுகிரகவாசிகளின் குழுவால் கடத்தப்பட்டதாகக் கூறுகிறார். இந்த மாத தொடக்கத்தில் தனது படுக்கையறையிலிருந்து தான் அவர்களால் கடத்தப்பட்டதாக பெலா தெரிவித்துள்ளார். தனது வேற்றுகிரக காதலன் (Lover) பூமியில் உள்ள அனைத்து மனிதர்களையும் விட சிறந்தவர் என்றும் அவரை அடுத்த முறை சந்திக்க ஆவலோடு காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளதாக டெய்லி ஸ்டார் அறிக்கை தெரிவித்துள்ளது.
” இந்த உலகில் உள்ள ஆண்களால் நான் நொந்து விட்டேன். ஒரு ஏலியன் என்னை கடத்த வேண்டும் என நான் வேடிக்கையாக ஆன்லைனில் கூறியிருந்தேன். அதற்குப்பிறகு தினமும் ஒரு வெள்ளை ஒளியின் கனவு எனக்கு வரத் தொடங்கியது. ஒரு நாள், என கவனில் ஒரு குரல், ‘வழக்கமான இடத்தில் காத்திரு’ என கூறியது. அடுத்த நாள் மாலை நான் எனது திறந்த ஜன்னலில் அமைர்ந்தேன். நான் தூங்கத் தொடங்கியவுடன், ஒரு பறக்கும் வாகனம் வந்தது. ஒரு பிரகாசமான பச்சை கற்றை என்னை யுஎஃப்ஒ-வுக்கு கொண்டு சென்றது” என்று அப்பி டெய்லி ஸ்டாரிடம் கூறினார்.
அப்பியின் கருத்துப்படி, அவர் சந்தித்த ஏலியன்கள் அனைவரும் மனிதர்களைப் போலவே இருந்தார்கள், ஆனால் அவர்கள் மனிதர்களை விட உயரமாகவும் மெல்லியதாகவும் இருந்தனர். தகவல்களின்படி, வேற்றுகிரக வாசிகளுடனான அவரது முதல் சந்திப்பு 20 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அதற்குப் பிறகு அவர் பாதுகாப்பாக தனது வீட்டிற்கு திரும்பியதாக அப்பி கூறினார். தனது ஏலியன் காதலுடனான அடுத்த சந்திப்புக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல், பவுலா ஸ்மித் என்ற மற்றொரு இங்கிலாந்து (England) பெண்மணி தான் தனது குழந்தைப் பருவத்தில் வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்பட்டதாகவும், அது அன்றிலிருந்து தொடர்கிறது என்றும் கூறியுள்ளார். தான் 50 தடவைகளுக்கு மேல் கடத்தப்பட்டுள்ளதாகவும் யுஎஃப்ஒ-க்கள் பூமரங்கின் வடிவத்தில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் யுஎஃப்ஒ-க்களின் விளிம்புகளில் விளக்குகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.