நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு மாதமாக அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று (21) அதிகாலை 4 மணி முதல் நீக்கப்பட்டன.
புதன்கிழமை இரவு10 மணிக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்கும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையான கடந்த மே மாதம் 21ஆம் திகதிகள் பயணக்கட்டுப்பாடுகள் அமுலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பித்தக்கது.
இன்று பயணத்தடை நீக்கப்படினும், அத்தியாவசிய நோக்கங்களுக்காக பயணிக்கும் வாகனங்கள் தவிரந்த, மாகாணங்களுக்கு இடையேயான பயணம் தடைசெய்யப்படும்.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், பொதுக்கூட்டங்கள், மற்றும் அத்தியாவசியமற்ற செயல்களுக்காக மக்களை கூடுவது தொடர்பான உத்தரவுகள் நடைமுறையில் இருக்கும்.
ஜூன் 21 முதல் ஜூலை 5 வரை நடைமுறையிலுள்ள 11 முக்கிய சுகாதார வழிகாட்டுதல்கள் பின்வருமாறு.
♦எந்த நேரத்திலும் ஒரு வீட்டிலிருந்து வெளியேற 02 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
♦ஒரு வாடகை முச்சக்கர வண்டி அல்லது டாக்ஸியில் 02 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்
♦மேற்கு மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50% திறன் கொண்ட பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. மேற்கு மாகாணத்திற்குள் அத்தியாவசிய சேவைகளில் இணைக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
♦அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே பணிக்கு வரவழைக்க வேண்டும்.
♦திருமணங்களுக்கு அனுமதி இல்லை: மணமகனும், மணமகளும் உட்பட 10 பேருடன் திருமண பதிவு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
♦கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. மேற்கு மாகாணத்தைத் தவிர்த்துஏனைய இடங்களில் வர்த்தக வளாகங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.
♦இறுதிச் சடங்குகள் அதிகபட்சம் 15 பங்கேற்பாளர்களுடன் 24 மணி நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
♦மேற்கு மாகாணத்தில் அலுவலக கூட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. மற்ற மாகாணங்களில் 10 பேர் சந்திக்கலாம்.
♦மத தலங்கள், ஜிம்கள், ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள், இரவு கிளப்புகள், விடுதிகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும்.
♦விளையாட்டு: தனியாக பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யலாம், குழு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.
♦சலூன்: திறந்த, ஒரே நேரத்தில் 3 வாடிக்கையாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர் திறனில் 25% வாடிக்கையாளர்களை மட்டுமே சூப்பர் மார்க்கெட்டுகளுள் கொண்டிருக்க வேண்டும்.




