பிறந்தநாளில் வாழ்த்துக்களை பொழிந்த அனைவர்க்கும் காஜல் அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று காஜல் தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். காஜல் திருமணத்திற்குப் பிறகு கணவருடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் மிகவும் ஸ்பெஷலாக கொண்டாடியுள்ளார். அதில் காஜலின் தங்கை நிஷாவும் கலந்துகொண்டார். மூவரும் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
காஜலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பொழிந்தனர். திரைத்துறை பிரபலங்களும் காஜலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தற்போது காஜல் தனக்கு வந்து குவிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் அனுப்பிய என் அற்புதமான ரசிகர்களுக்கு மிக்க நன்றி, அருமையான, ! இவ்வளவு அன்பும் சந்தோஷமும் என்னை விண்ணிற்கு கொண்டு சென்று திக்குமுக்காட வைத்துவிட்டது. நீங்கள் அனைவரும் எனது பிறந்த நாளை மிகவும் சிறப்பானதாக ஆக்கியுள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டு கணவருடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார் காஜல். காஜல் தற்போது சிரஞ்சீவி உடன் ‘ஆச்சர்யா’ படத்தில் நடித்து வருகிறார். சில தமிழ் படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.