இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும். இருக்கும்.
நாடாளுமன்றம் நாளை மற்றும் புதன்கிழமை கூடவுள்ளது.
சபாநாயகரின் தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அத்துடன், பொது நிதிக்கான குழு மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவும் இன்று சந்திக்க உள்ளன.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வேண்டிய நம்பிக்கையில்லா பிரேரணை இந்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.



