மகனின் பெயரை அறிவித்த பிக்பாஸ் நடிகர் மகத்

Date:

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் மகத், மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது. சிம்புவின் நெருங்கிய நண்பராக திரையுலகில் அறியப்படுகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

சினிமாவில் பிசியாக நடித்து வரும் மகத், மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து மகத் – பிராச்சி தம்பதிக்கு கடந்த 7ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதை சமூக வலைத்தளத்தில் குழந்தையின் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார் மகத். இதோடு தனது மகனுக்கு சரியான பெயரை தேர்வு செய்து வருவதாகவும், விரைவில் பெயரை அறிவிப்பேன் என்று மகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மகத் – பிராச்சி தம்பதி தங்களது ஆண் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர். அதன்படி ’அதியமான் ராகவேந்திரா’ என்ற பெயரை வைத்துள்ளனர். இந்த தகவலை நடிகர் மகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் மகத் – பிராச்சி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்