நேற்று 2,248 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 237,661 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,169 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 79 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது, 35,734 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 2,134 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர்,. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 199,393 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 1,448 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.



