29.5 C
Jaffna
March 28, 2024
விளையாட்டு

வைரலான இந்த மீம்-ல் இருப்பவர் யார்? என்ன செய்கிறார் தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டு ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்தபோட்டியின் போது பாகிஸ்தானிற்கும் அவுஸ்ரேலியாவிற்கும் இடையே போட்டி நடந்தது. இந்த போட்டி பாகிஸ்தானிற்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்தது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து களத்தில் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் அந்த உலக கோப்பை போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலையில் அந்த போட்டி பாகிஸ்தானிடமிருந்து கை நழுவி சென்றது.

போட்டியின் போது பாகிஸ்தான் இனி வெற்றி பெறவே முடியாது என்ற நிலை வந்த போது பார்வையாளர்களில் ஒருவர் தனது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு வித்தியாசமாக குழப்பமாக பார்த்தார். அதை ஸ்டேடியத்திலிருந்தவர் வீடியோவாக எடுத்தார். இது உலகம் முழவதும் ஒளிபரப்பாகியது. இந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட் வைரலாக மாறியது. பலர் இவரை மீம் கன்டென்டாக பார்த்து அந்த புகைப்படத்தை மீம்மாக மாற்றினர்.

குழப்பமாக விஷயங்கள், கைக்கு வரவேண்டியது சில தவறான முடிவுகளால் கை நழுவி போனது போன்ற சம்பவங்களில் இவரது மீம்மை பயன்படுத்தினர். இதனால் இவர் உலக அளவில் டிரெண்டானார். இவரை பலர் யார் என தேடிய போது இவரது பெயர் முகம்மது சரீம் அக்தர் என்பது தெரியவந்தது.

அவரது லிங்க்டுஇன் புரோபைலை சிலர் பார்த்த போது அவர் பிரின்ஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற லண்டன் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருவது தெரியவந்தது. பலருக்கு இவர் யார் என்ன செய்கிறார்? இவரது வாழ்க்கை என்ன என்ற கேள்வி இருந்த நிலையில் இவர் தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

இந்த மீம் வைரலான நிலையில் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஊக்கமளித்து பேசும் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அந்த வீடியோவும் வைரலானது.

 

இன்று வரை அவரது பெயர் கூட தெரியாமல் தான் அவரது மீம்மை நாம் ஷேர் செய்து கொண்டிருந்தோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment