பந்துல வந்தார்!

Date:

வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று (16) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள “ரஜவாச” பல்பொருள் விற்பனை நிலையம் தொடர்பாக அமைச்சரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

குறித்த கள விஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், வாணிக வர்த்தக அமைச்சின் உணவு ஆணையாளர் ஜே.கிறிஸ்ணமூர்த்தி, சதோச நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பீரீஸ், வாணிக வர்த்தக அமைச்சின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்