உ.பி மாநிலம் மகராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் தங்கள் மகளுக்காக திருமணம் நடத்தி ஏற்பாடு செய்திருந்தனர். இந்த திருமணம் காதல் திருமணம், மக்கள் மணமக்கள் இருவரும் பரஸ்பரம் சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலில் விழுந்தவர்கள். இந்நிலையில் அந்த பெண் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்தவர். ஆண் வேறு மதத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்யது கொள்ளும் அளவிற்கு காதலித்து விட்டனர்.
ஆனால் ஆண் இஸ்லாம் மதத்தை சாராதவர் என்பதால் அவரை திருமணம் செய்ய பெண் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என இருவருக்கும் முன்னரே தெரிந்து இருவரும் சேர்ந்து அந்த ஆண் முஸ்லீம் தான். என அவர்களது பெற்றோரை நம்பவைத்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிலையில் திருமணத்தின் போது மணமகன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்யும் போது உருது பேச தெரியாமல் தவித்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்களுக்கு இவர் உண்மையிலேயே இஸ்லாமியர் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது பான் கார்டை வாங்கி சோதித்து பார்த்தபோது தான் அவர் இஸ்லாமியரே இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளார்.
ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தும் போது தான் மணமகளுக்கு இவர் இஸ்லாமியர் இல்லை என்ற விஷயம் தெரியும் என்றும் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காகவே பொய் சொன்னதாகவும் கூறினார். இதையடுத்து திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.