குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கம்பஹா உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை பிணை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்போது நீதிபதிகள் நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர் குருசிங்க ஆகியோர் அடங்கிய குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இருவரும் தலா ரூ .25,000 பிணை, தலா ரூ .1 மில்லியன் பெறுமதியான இரண்டு தனிப்பட்ட பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டனர்.
எஸ்.எஸ்.பி ஷானி அபேசேகர மற்றும் எஸ்.ஐ. மெண்டிஸ் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களின் பிரைண விண்ணப்பங்களை கம்பஹா நீதிவான் நீதிமன்றம் மற்றும் கம்பஹா உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இருவரும், திருத்தம் செய்யப்பட்ட பிணை மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.