அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஸ்டீவ் ப்யூகர், இவரும் இவரது மனைவியும் கடந்த 3ம் திகதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்பொழுது இவரது மனைவிக்கு லேசான முழிப்பு வந்துள்ளது. அப்பொழுது அவர் வீட்டின் மாடியில் உள்ள பாத்ரூமில் யாரோ குளிப்பது போல சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பயந்து போன அவரது மனைவி ஸ்டீவை எழுப்பி யாரோ நம் வீட்டிற்குள் நுழைந்துவிட்டனர். என கூறியுள்ளார். ஸ்டீவ் அவரது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அவர் மாடியில் உள்ள ஒரு ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு வீட்டிற்குள் திருடன் புகுந்து விட்டான் என உறுதி செய்துள்ளார். அதன் பின் ரூம் உள்ளே சென்று பார்த்த போது திருடன் தனது வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த குளியல் அறையில் குளித்துவிட்டு வெறும் தூண்டை மட்டும் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தான். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வரும் வரை அந்த திருடன் ஸ்டவின் துப்பாக்கி முனையில் இருந்தான்.
தற்போது போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.