விறுவிறுப்பாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள்.. விரைவில் தொடங்கும் ஷூட்டிங் !

Date:

‘தளபதி 65’ படத்தின் ஷூட்டிங்கை வரும் ஜூலை மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் – நெல்சன் கூட்டணி படத்தின் பணிகள் மீண்டும் வேகமெடுக்க துவங்கியுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இப்படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கி 16 நாட்கள் நடைபெற்றது. இதில் ஒரு பாடல் காட்சியும், சண்டைக்காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் கொரானாவின் 2ம் அலையின் தீவிரவத்தால் ஷூட்டிங்கை தள்ளி வைக்கப்பட்டது

இந்நிலையில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வரும் ஜூலை முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இரண்டு வாரங்கள் இந்த ஷூட்டிங் நடைபெற உள்ளது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே-வுடன் நடிக்கும் ஒரு டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட்ட உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில்,...

‘மென்மையான தண்டனை வழங்குங்கள் என கேட்க வெட்கப்படுகிறேன்’: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தில் கூறியவை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்...

யாழ்ப்பாண ஐயா, மலையகத்தில் செய்த மோசடி வேலை!

நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக நுவரெலியா பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்