கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வீதிகளில் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் குழிகள் ஏற்பட்டது. ரோடுகள் எல்லாம் பல்லாங்குழிகளாக மாறின. இந்நிலையில் சமீபத்தில் வைரலாகும் ஓரு வீடியோ ஒன்று காண்பவர்களாக ஷாக்காக்கியுள்ளது.
மும்பையின் மேற்கு காத்கோபர் பகுதியை உள்ள காமா லைன் என்ற இடத்தில் உள்ள ஒரு அப்பார்மெண்டில் தரைதளத்தில் கார்கள் எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பொழுது ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீடீரென புதை குழி ஏற்பட்டது. இதில் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று தீடீரென யாரும் எதிர்பாராத நிலையில் அந்த புதை குழிக்குள் புகுந்துவிட்டது. இந்த காட்சியைத அப்பகுதியிலிருந்த ஒருவர் தன் செல்போன் கேமராவில் பதிவு செய்திருந்தார். இந்த கார் புதை குழிக்குள் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
#MumbaiRains
Car swallowed completely by a sinkhole in residential complex in Mumbai.. Later discovered that it was a covered well under a parking lot! pic.twitter.com/nvLct0QqfU— Subodh Srivastava 🇮🇳 (@SuboSrivastava) June 13, 2021
அந்த வீடியோவில் முதலில் பார்க்கும் போது சின்ன குழியாக தெரிகிறது. ஆனால் ஒரு கார் முழுவதும் உள்ளே சென்றுவிடும் அளவிற்கு ஆழமாக இந்த குழி இருந்துள்ளது. இந்த வீடியோ வைரலான பின்பு போலீசரும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து அப்பகுதிக்கு வந்து குழிக்கும் சென்ற காரை கிரேன் மூலம் மீட்டனர்.