இன்றைய மனித வாழ்க்கை மிகவும் எந்திரமயமாகிவிட்டது. மக்கள் எல்லோரும் அவரவருக்கான வேலைகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றனர். சிலருக்கு ஒரு நாளுக்கு 24 மணி நேரம் இருப்பதே போதவில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் நன்றாக இருக்கும்என நினைக்கும் அளவிற்கு அவர்களது வேலைப்பளு இருக்கிறது.
இந்தியா
இந்தியாவின் பெரும்பாலான நாட்கள் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் பகல் பொழுது 12 மணி நேரம்இரவு பொழுது என இருக்கிறது. மற்ற சில நாடுகளில் இரவு பொழுது குறைவாகவும், பகல் பொழுது அதிகமாகவும் இருக்கும் அது நமக்கு தெரியும். ஆனால் ஒரு நாளில முழு நேரமும் பகல் நேரம் இருக்கும் நாடுகள் இந்த உலகில் இருக்கின்றன அது பற்றி உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் காணலாம்
நோர்வே
உலகின் ஆர்டிக் சர்க்கிள் பகுதியில் இருக்கிறது இந்த நாடு. இந்த நாட்டை நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு என் கூறுவார்கள். இந்த நாட்டில் மே மாதம் துவங்கி ஜூலை மாதம் இறுதி வரை 76 நாட்கள் சூரியன் மறைவதேயில்லையாம். ஒரு நாளுக்கு சுமார் 20 மணி நேரம் சூரிய வெளிச்சம் நேரடியாக இருக்குமாம். ஸ்வேல் பார்டு எனப்படும் இந்நாட்ன் வடதுருவத்தில் ஒரு பகுதி உள்ளது. அங்கு மக்கள் யாரும் வசிப்பதில்லை இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப் 10-ஆகஸ்ட் 23 வரை சூரியன் தொடர்ந்து இருக்குமாம் ஒரு நிமிடம் கூட மறையாதாம். அந்த காலங்களில் அவர்களுக்கு இரவு என்பதே இருக்காதாம்.
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து மிக அழகிய நாடு. இந்நாடு ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டனிற்கு அடுத்த படியாக மிகப்பெரிய தீவாகும். இந்த நாட்டில் மே 10 முதல் ஜூலை மாதம் வரை இந்த நாட்டில் சூரியன் மறையவே மறையாதாம். இந்த காலங்களில் தான் அந்த நாட்டில் மலையேறுதல், வன விலங்கை காணுதல், குகைவாசம், சைக்கிளிங், தேசிய பூங்காக்களை பார்வையிடுதல் போன்ற விஷங்களை அந்நாட்டு மக்கள் செய்வார்களாம்.
கனடா
உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு கனடா. இந்த நாட்டின் பெரும் பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் இந்த நாட்டில் பனிப்பொழிவு இருக்கும். இந் நாட்டின் வடதுருவத்தில் உள்ள இனுவிக் என்ற பகுதியில் கோடை காலத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகள் சூரியன் மறையாமல் இருக்குமாம். அந்த காலங்களில் மக்கள் அரோரா வியூவிங், மலையேற்றம், ஹாட் ஸ்பிங்ஸ், தொங்கு பாலத்தில் நடப்பது. ரோடுகளில் பயணம் உள்ளிட்ட விஷயங்களை செய்வார்களாம் மற்ற நேரங்களில் அதிக பனிப்பொழுவு இருப்பதால் இதெல்லாம் செய்ய முடியாத சூழ்நிலை இருக்குமாம்.
அலஸ்கா
அலஸ்கா என்பது அமெரிக்காவின் ஒரு மாகாணம், ஆனால் இது கனடாவிற்கும் மேலே இருக்கிறது. இந்த நாட்டில் மே மாத இறுதியில் துவங்கி ஜூலை மாத இறுதி வரை சூரியன் மறையாமலேயே இருக்குமாம். இந்த நாட்டில் உள்ள மிளிரும் பனிமலைகள் தான் இந்நாட்டிற்கே அழகே. இந்த கோடை காலத்தில் அதிகாலை 2 மணிக்கு ஒளிரும் சூரிய ஒளியில் பனிமலைகளை பார்ப்பது தான் இந்த நாட்டின் ஸ்பெஷல்
சுவிடன்
மற்ற நாடுகளை ஓப்பிடும் போது இந்த நாடு சற்று இதமான நாடு தான் இங்கு அவ்வளவு அதிகமான பனியில்லை. இருந்தாலும் இந்த நாட்டில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சூரியன் நள்ளிரவு தான் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் உதயமாகிவிடுமாம். இந்த காலங்களில் அந்நாட்டு மக்கள் மீன் பிடிப்பது, கோல்ஃப் விளையாடுவது, தேசிய பூங்காக்களுக்கு செல்வது, உள்ளிட்ட அட்வெஞ்சர்களை செய்வார்களாம்.
பின்லாந்து
இந்த நாடு தீவுகளாலும், ஏரிகளாலும் நிறைந்த நாடு, இந்த நாட்டில் ஒரு ஆண்டிற்கு மொத்தமே 73 நாள் மட்டும் தான் சூரிய வெளிச்சம் இருக்கும் மற்ற நாட்களில் முழுவதும் பணிதான். இந்த நாட்டின் பனி வீடுகள் கட்டப்படுகிறது. கோடை காலத்தில் இயற்கையின் நிறம் அழகாக தெரியும். அதானல் அந்த காலத்தில் தான் இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர்.