27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட தீர்மானம்!

எரிபொருள் விலையை அதிகரிக்கும் முடிவு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தால் கூட்டாக எடுக்கப்பட்டது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் கம்மன்பில, பிரதமர் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கியதாகக் கூறினார்.

பொதுஜன பெரமுன செயலாளர் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சரால் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

வாழ்க்கை செலவுக் குழுவும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அமைச்சர் கமன்பில குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, பிரதமர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு நமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோர் அந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் பல விடயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார், அதே நேரத்தில் அவர் அரசாங்கத்தால் எட்டப்பட்ட முடிவை அறிவித்தார்.

இந்த விஷயத்தில் திறந்த விவாதத்திற்கு வர தயாரா என பொதுஜன பெரமுனவின்  பொதுச் செயலாளர் எம்.பி. சாகர கரியவசத்திற்குசவால் விடுத்தார்.

பெரமுனவின் தலைவரும் தவிசாளரும் அந்த அறிக்கையை அறிந்திருக்கவில்லை என்பதால், அத்தகைய அறிக்கையை வெளியிட செயலாளர் சாகர கரியவசத்திற்கு என்ன அதிகாரம் உள்ளது என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இத்தகைய அறிக்கையை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகளை செயலாளர் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

Leave a Comment