சினிமா

நமது திருமணத்திற்கு சாட்சியே இல்லை: ஒரே போடாக போட்ட நடிகை!

தங்கள் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று பலமுறை கூறியதாகவும் ஆனால், நுஸ்ரத் ஜஹான் எம்.பி, மறுத்து விட்டதாகவும் தொழிலதிபர் நிகில் ஜெயின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜஹான், கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அப்போது வைரலாயின.

இந்நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர். இதற்கிடையே, அறிக்கை வெளியிட்டிருந்த நுஸ்ரத், ‘நாங்கள் எப்போதோ பிரிந்துவிட்டோம். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசவேண்டாம் என்று நினைத்ததால் அதை பற்றி சொல்லவில்லை. நிகில் ஜெயினுடனான என் திருமணம் செல்லாது. ஏனெனில் இந்தியாவில் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களுக்கு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகாரம் தேவைப்படுகிறது. எங்களது திருமணம் அப்படி நடக்காததால் எங்கள் பிரிவு எப்போதோ முடிந்துவிட்டது’ என்ற அவர், தனது வங்கி கணக்குகளை நிகில் தவறாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து நிகில் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமணத்தைப் பதிவு செய்யலாம் என்று பலமுறை நுஸ்ரத்திடம் வலியுறுத்தினேன். அவர் அதற்கு மறுத்துவிட்டார். நான் அவர் பணம் எதையும் எடுக்கவில்லை. என் மீது அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, நுஸ்ரத், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பிரியங்காவுடன் இரவில் உறவுகொள்ள இது மிக அவசியம்: அந்தரங்கத்தை அவிழ்த்து விடும் அமெரிக்க காதலன்!

Pagetamil

அக்ஷய்குமார், நிவேதா தாமஸ், கவுரிகிஷனுக்கு கொரோனா

Pagetamil

தனது மகனுக்கு பெயர் சூட்டி உலகிற்கு அறிமுகப்படுத்திய பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!