பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதைத் தொடர்ந்து அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் வெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு தற்போது அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், நியூசிலாந்து சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு மட்டுமே இந்த தளர்வுகள் பொருந்தும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1