கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் டுவிட்டர் கணக்கில் அவர் பதிவிட்ட பதிவொன்றை டுவிட்டர் நிறுவனம் திடீர் நீக்கியது. தங்கள் நிறுவன விதிகளுக்கு எதிராக அந்த பதிவு இருந்ததால் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் நைஜீரியாவில் டுவிட்டர் நிறுவனம் தடை செய்யப்படுவதாக நைஜீரிய அரசு அறிவித்தது. இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, ‘சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்கு அனுமதியளிக்காத டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும்’ என கூறினார்.
டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் டிரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. டிரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது குறிப்பிடத்தக்கது