26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
உலகம்

உலகிலேயே விலை உயர்ந்த குடிநீர்; ஒரு லிட்டர் ரூ. 60 லட்சம்…

பேக்கஜ் குடிநீர், மினரல் வாட்டர் என்று உழன்று கொண்டிருக்கும் சாமானிய மக்களிடையே, இது மிகவும் தரமான குடிநீர், என்று சில பிராண்டை மட்டுமே விரும்பி குடிப்பவர்களும் உண்டு.

இந்தியாவில் சாதாரணமாக ஒரு லிட்டர் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் இந்த வகை சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் உலகிலேயே அதிகபட்சமாக நோர்வேயில் ரூ. 113 ம், அமெரிக்காவில் ரூ. 81, இலங்கையில் ரூ. 25, பாகிஸ்தானில் ரூ. 17, நேபாளில் ரூ. 15 க்கும் விற்கப்படுகிறது.

சிறந்த பிராண்டுகள் என்று சொல்லப்படும் இந்த வகை சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரின் விலை ரூ. 30 முதல் 40 வரை விற்பனையாகிறது, இதற்கே பல சாமானிய இந்தியர்கள் வாயை பிளப்பது உண்டு.

உலகிலேயே மிக விலையுயர்ந்த குடிநீரின் 750 எம்.எல். பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 44 லட்சம் ரூபாய் என்ற தகவலை கேட்டால் அவர்களுக்கு மயக்கமே வந்துவிடும்.பேக்கஜ் குடிநீர், மினரல் வாட்டர் மட்டுமே அதிகளவில் கேள்விப்பட்டிருக்கும் நாம், ஸ்ப்ரிங் வாட்டர் எனும் இயற்கை நீரூற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதில்லை.

உலகின் பல்வேறு இடங்களில் கிடைக்கக்கூடிய இயற்கை நீருற்று தண்ணீரை அங்கேயே நேரடியாக ஊற்றில் இருந்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது.அப்படி விற்கப்படும் நீரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் முதல் பத்து குடிநீர் குறித்த பட்டியல் :

10. பைன்

ஜப்பானில் உள்ள பியூஜி மலையில் உள்ள பழமையான எரிமலை பாறைகளில் வடிகட்டி இயற்கையாக வரும் நீர், 2005 ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த குடிநீர் 750 எம்.எல். விலை ரூ. 365.

9 டாஸ்மானியன் ரெயின்

பெயரில் குறிப்பிட்டுள்ளது போல், ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாகாணத்தில் விழும் மழைத்துளிகளை நேரடியாக பாட்டில்களில் பிடித்து விற்பனை செய்யப்படுகிறது. உலகிலேயே சுற்றுசூழல் மாசு மிகவும் குறைவாக அதாவது 10 லட்சம் துகள்களில் 17 மட்டுமே அசுத்தமானது என்று கூறப்படுகிறது. இந்த குடிநீரும் 750 எம்.எல். ரூ. 365 க்கு விற்கப்படுகிறது.

8. லாகுவேன் ஆர்டிஸ் மினரல் வாட்டர்

அர்ஜென்டினா நாட்டின் தென் கோடியில் உள்ள சான் கார்லோஸ் நகரில் உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ள அடர்ந்த காட்டிற்குள் 1700 அடி ஆழத்தில் இருந்து கிடைக்கும் நீரை சுத்திகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நீரூற்று அமைந்திருக்கும் இடம் ஆண்டு முழுவதும் 4 டிகிரி செல்சியஸ் எனும் ஒரே சீதோஷ்ண நிலையில் உள்ளது. 750 எம்.எல். ரூ. 437

7. அக்வா டெகோ

டெகோ என்றால் கைவினை என்று பொருள். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாட்டில்களில் வரும் இந்த குடிநீர் கனடா நாட்டில் உள்ள தூய்மையான மாசுபடாத நீரூற்றுகளில் இருந்து பெறப்படுகிறது. சோடா கலக்காத (non-carbonated water) குடிநீருக்கான தங்கப்பதக்கத்தை 2007 ம் ஆண்டு பெற்ற இந்த குடிநீரை மக்கள் அதிகம் விரும்புவதால் இது உயர்தர நட்சத்திர ஓட்டல்களிலும் உணவகங்களிலும் கிடைக்கிறது இதன் விலை 750 மி.லி. ரூ. 875

6. 10 தவுஸன்ட் பி.சி.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள ஆள் அரவமற்ற தீவில் உள்ள பனிமலையில் இருந்து எடுக்கப்பட்ட நீர், இந்த இடத்திற்கு சென்று நீரை சேகரிக்க மூன்று நாட்கள் ஆகுமாம் 750 மி.லி. விலை 1020 ரூபாய்.

5. வீன்

எந்த ஒரு தாகத்தையும் தீர்க்கக்கூடிய நீராக சொல்லப்படும் இது பின்லாந்து நாட்டில் உள்ள ஒரு கிராமத்தின் பனிபிரதேசத்தில் இயற்கையாக வடிகட்டி வரும் நீரூற்று 750 மி.லி. ரூ 1675 க்கு விற்கப்படுகிறது.

4. பிளிங் H2O

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தில் உள்ள கிரேட் ஸ்மோக்கி மவுண்டெய்ன் மலையில் உள்ள ஊற்றில் இருந்து பெறப்படும் 9 கட்ட சுத்திகரிப்புக்குப்பின் அழகான பாட்டில்களில் அடைத்து உயர்தர நட்சத்திர ஓட்டல்களில் 750 எம்.எல். சுமார் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அங்கு வருபவர்கள் விலை உயர்ந்த ஷாம்பெய்ன் மது பாட்டில்களை திறப்பது போல் இதை திறந்து ரசித்துக் குடிப்பார்களாம்.

3. ஃபிலிக்கோ

செஸ் விளையாட்டில் ராஜா ராணி காய்களை போல் ஆடம்பரமாக விலையுயர்ந்த கண்கவர் கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் இது ஜப்பான் நாட்டின் கோப் பகுதியில் உள்ள நீருற்றுகளில் இருந்து கிடைக்கும் நீர் இதன் விலை 750 மி.லி. சுமார் ரூ. 16000

2. கொனா நிகாரி வாட்டர்

உலகின் இரண்டாவது அதிக விலையுள்ள குடிநீர் ஹவாய் தீவுகள் அருகே கடலுக்கு அடியில் உள்ள தரைமட்டத்திலிருந்து ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து எடு்கப்படும் நீர். எலக்ட்ரோலைட்ஸ்கள் அதிகம் அடங்கிய இந்த குடிநீர் உடல் எடையைக் குறைத்து அதிக உற்சாகமளிப்பதோடு சருமத்தின் வனப்பையும் கூட்டுகிறது. இதனை மருத்துவர்களும் பரிந்துரைப்பதாக சொல்லப்படுகிறது 750 மி.லி. சுமார் ரூ. 30000 க்கு விற்கப்படுகிறது.

1. அக்வா டி கிரிஸ்டலோ ட்ரிபுடோ அ மாடிகிலானி

750 எம்.எல். சுமார் 44 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்படும் குடிநீர். பிஜி மற்றும் பிரான்சில் உள்ள ஒரு இயற்கை நீரூற்றுகளில் இருந்து வரும் இந்த நீர் 24 காரட் தங்க பாட்டிலில் வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தண்ணீரையும் விட மிகச்சிறந்த நீர் என்று சொல்லப்பட்டாலும் இதை அடைத்து வைத்திருக்கும் பாட்டிலுக்காகவே அதிக விலை விற்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

Leave a Comment