கோத்தகிாியில் காட்டுயானை தாக்கி ஆதிவாசி இளைஞா் பலியானது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிாி மாவட்டம் குன்னுாா் மற்றும் கோத்தகிாி பகுதிகளில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. இதனால் சமவெளி பகுதிகளிலிருந்து குன்னுாா் மற்றும் கோத்தகிாி பகுதிகளிலிருந்து காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையிலில் கோத்தகிாி குஞ்சப்பணை அருகே உள்ள செம்மனாரை ஆதிவாசி கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி இருளா் ராமசாமி (லேட்) என்பவரது மகன் ராஜ்குமாா் (வயது 26) அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு இரவு செம்மனாரை கிராமத்திற்கு திரும்பும்போது புதரில் மறைந்திருந்த காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா்.
உடனே அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினா் உடலை மீடடு பிரேத பாிசோதனைக்கு கோத்தகிாி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து கோத்தகிாி போலீசாரும் வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனா்