கார்த்திக் சுப்புராஜ் – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் ஜூன் 18ம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதையடுத்து விக்ரமின் 60வது படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தில் விக்ரமுடன் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை முடிந்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் ஒன்று அண்மையில் வெளியானது. ஆனால் இது உறுதியான தகவல் இல்லை என கூறப்படுகிறது. அப்படியென்றால் கார்த்தின் சுப்புராஜ் படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா, பேட்ட படங்களுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிரொக்ஷன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.