சினிமா

விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்!

பிசாசு 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ‘பிசாசு 2’ தயாராகி வருகிறது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கேரக்டரில் நடிக்கிறார். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இவர்களுடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பிசாசுவை விரட்டும் விஜய் சேதுபதி.. மிஷ்கின் படத்தின் புதிய அப்டேட்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிஷ்கின் படம் என்றாலே டார்க் மோடில் இருக்கும். பேய் படம் என்றால் திகிலாக இருக்கும். அனைவரையும் பயமுறுத்தும் கதாபாத்திரங்கள், இப்படிதான் பேய் படங்கள் வெளியாகி வெற்றிப்பெறுகின்றன. ஆனால் மிஷ்கின் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஹீரோவை காப்பாற்றும் பேய்யாக பிசாசு படத்தில் காட்டியிருப்பார் மிஷ்கின்.

பிசாசுவை விரட்டும் விஜய் சேதுபதி.. மிஷ்கின் படத்தின் புதிய அப்டேட்

இதேபோன்று தான் பிசாசு 2 உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது கொரானாவால் இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘பிசாசு 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம். தற்போது அவர் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி எப்போதும் விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்பதால், பேய் ஓட்டும் ஆசாமியாக நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

2ஆவது முறையாக கர்ப்பம்: மனைவிக்கு வளைகாப்பு நடத்திய சாண்டி மாஸ்டர்!

divya divya

நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் ஆறுதல்!

divya divya

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டும் மர்ம நபர்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!