தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஏற்றி வந்த பேருந்து விபத்து: வவுனியாவில் சம்பவம்!

Date:

வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு ஆட்களை ஏற்றிச் சென்று பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது.

குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு தி்ரும்பிய பயணிகளை அழைத்துக் கொண்டு கிளிநொச்சி பூநநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்குள்ளாகியது.

பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்பபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...

கசிப்பு தேடிய பொலிஸ்காரர் கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை!

சட்டவிரோத மதுபான ஆலை மீதான சோதனையின் போது ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்