முகக்கவசம் அணியாமல் யூடியூப் நிகழ்ச்சி நடத்திய பத்திரிகையாளர் மீது பொலிஸ் முறைப்பாடு!

Date:

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக, ஆளுந்தரப்பு ஆதரவு பத்திரிகையாளர் சமுதித்த சமரவிக்ரம மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வுகள் அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்கவினால் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனக்கும், தனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் எடுத்த முடிவை விமர்சித்து நீதித்துறையை அவமதித்ததற்காக ஒரு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், நீதிமன்ற அமர்வுகள் மீண்டும் தொடங்கியதும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யூடியூப் நேர்காணலில் முகக்கவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை பேணாமலும் நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம்,  தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சமுதித்த சமரவிக்ரம மீது மற்றொரு  முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...

ஈரானில் வீசப்படுமா ‘அனைத்து குண்டுகளின் தாய்’?: அமெரிக்கா தீவிர ஆலோசனை!

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் போர் நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்டால், ஈரானிய...

எரிவாயு விநியோக சிக்கல் விரைவில் தீருமாம்!

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நுகர்வோர், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்