உற்பத்திப்பொருட்கள் நேரடியாக நுகர்வோருக்கு!

Date:

விவசாயிகளது உற்ப்பத்தி பொருட்களை நேரடியாக பாவனையாளருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் சேதுகாவலர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்றையத்தினம் வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவித்தபோது-

தற்போதைய நிலையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளோம். அதன் விலை தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு புதிய ஒரு செயற்திட்டத்தினை ஏற்ப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளொம். அந்த வகையில் விவசாயிகளிடம் இருந்து வீடுவரை என்ற செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து இதனை முன்னெடுக்கவுள்ளோம். இதன் மூலம் விவசாயிகளது உற்ப்பத்தி பொருட்களை நேரடியாக பாவனையாளருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஆகக்குறைந்த விலையில் கொள்வனவுசெய்வதற்கான கட்டுப்பாட்டு விலையினையும் வைத்துள்ளோம். அந்தவகையில் விற்பனை முகவர்களூடாக இந்த பொருட்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குபவர்கள் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலங்களூடாக தொடர்பினை ஏற்படுத்தி பெற முடியும்.

இதேவேளை கட்டுபாட்டு விலையினை மீறி விற்பனை செயற்பாடு இடம்பெறுவதை கண்காணிக்கும் பணியினை கிராமஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள். சமுர்த்தி உத்தியோகதர்கள் மேற்கொள்வார்கள். அத்துடன் 5 கிலோவிற்கு மேற்ப்பட்ட மரக்கறிகள் தேவையாக இருந்தால் அதனை வீட்டுற்கே வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

அத்துடன் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து இங்கு வியாபாரம் மேற்கொள்பவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள வழித்தட அனுமதியானது இங்குள்ள விவசாய உற்பத்திபொருட்களை வெளிமாவட்டத்திற்கு கொண்டுசெல்வதற்காகவே வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களின் வழித்தட அனுமதிகள் இரத்துச் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் பொலிசாரூடாக முன்னெடுக்கப்படும்.

எனவே வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு மரக்கறிகளை கொண்டுவருவதற்கு முன்பு இங்குள்ள மரக்கறி மற்றும் பழங்களை அவர்கள் எடுத்துச்செல்லவேண்டும்.

இவ்வாரத்திற்கான புதிய விலைப்பட்டியல்

கத்தரிக்காய் ஒருகிலோ 120 ரூபாவிற்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்யப்பட்டு 180 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படும். வெண்டிக்காய் கொள்விலை 60, விற்பனைவிலை90, கறிமிளகாய் கொள்விலை 120, விற்பனைவிலை180, பயிற்றை கொள்விலை 100,விற்பனைவி லை150, பாவற்காய் கொள்விலை170, விற்பனைவிலை 250, புடோல் கொள்விலை 100, விற்பனைவிலை 125, முட்டை மிளகாய் கொள்விலை 150, விற்பனை விலை 230, பூசணி கொள்விலை 30, விற்பனைவிலை 45, மரவள்ளி கொள்விலை40, விற்பனைவிலை60 .

இதேவேளை விவசாய பொருடகளை வாகனத்தில் விற்பனை செய்பவர்கள் இவ்வாரத்திற்கான விலைப்பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என்றார்.

மரக்கறிகள் தேவையானவர்கள் மற்றும் இது தொடர்பான ஏனைய தகவல்களை பெற்றுக்கொள்ள கீழ் குறிப்பிட்ட இலக்கங்களிற்கு தொடர்பினை ஏற்ப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0242229399
0773030953
0773065203

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்