நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் 17 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் காணாமல் போயுள்ளனர்.
10 மாவட்டங்களில் 67,613 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டது. அங்கு 161,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
26,806 நபர்கள் 106 தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கன மழை, வெள்ளம், மண் சரிவு காரணமாக 17 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 978 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் ஒன்பது மாவட்டங்களுக்கு வழங்கிய நிலச்சரிவு எச்சரிக்கைகள் மாலை 4.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, கேகாலை மற்றும் இரத்னபுரி மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.