இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்களைப் பெரிதும் பாதித்து வருகிறது. எனவே கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம் காண்பித்து வருகிறது. அதன் முக்கியமான படியாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் பலர் தடுப்பூசி மீது இருக்கும் அச்சம் காரணமாக அதைத் தவிர்த்து வருகின்றனர்.
திரைத்துறை பிரபலங்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மற்றும் அவரது மகன் அமீன் இருவரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதாகத் தெரிவித்துள்ளார். CoviShield தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.